மெரினா கடற்கரையில் 'நம்ம சென்னை' செல்பி மையத்தை மிக பிரம்மாண்டமாக முதல் பழனிசாமி தொடங்கி வைத்தார். 'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்ற பெருமை சென்னையே சாரும். ஏனென்றால் சென்னையில் பல கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தங்களது சொந்த ஊரை விட்டுவிட்டு சென்னையில் குடிபெயர்ந்துள்ளனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் சென்னையில் பிடித்த இடம் எதுவென்றால் மெரினாவையே கூறுவார்கள். பலரது வாழ்க்கையில் மெரினா ஒரு முக்கிய அங்கமாய் கலந்துள்ளது.
காதலர்கள் சந்திப்பதில் இருந்து பெரியவர்கள் வாக்கிங் போகும் வரை அனைத்து பெருமையும் மெரினாவுக்கு தான். இந்நிலையில் இன்று முதலவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சுமார் 24 லட்சம் மதிப்பில் 'நம்ம சென்னை' என்ற செல்பி மையத்தை மிக பிரம்மாண்டமாக திறந்து வைத்தார். அந்த மையத்தில் மக்கள் தங்களது குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வருகை தந்து செல்பி எடுத்து கொண்டு சென்னையின் மேல் உள்ள அளவில்லாத பாசத்தை வெளிப்படுத்துகின்றனர். சில அரசியல் முக்கிய புள்ளிகளும் இங்கே செல்பி எடுத்து தங்களது ட்விட்டரில் பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.