தேவேந்திரகுல வேளாளர் பிரிவை சட்டப்பூர்வமாக்க, மாநில அரசுக்கு குழு பரிந்துரை!

by Loganathan, Jan 29, 2021, 09:37 AM IST

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகப்படியான இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் 50 % இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 69 % இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் தான் தமிழகம் சமூக நீதியின் தொட்டிலாக பார்க்கப்படுகிறது. இந்த 69 % இட ஒதுக்கீடானது பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதமாகவும், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் ஆகியோருக்கு 19 % வழங்கப்பட்டு வருகிறது. எனினும் மேற்கூறிய இட ஒதுக்கீடு முறையில் அவ்வப்போது சிக்கல்கள் வந்து கொண்டு இருந்தாலும், அதனை முறைமை படுத்த அரசுகள் தங்களின் செயல்பாடுகளை முன்வைத்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான குடும்பன், பன்னாடி, கடையன், பள்ளர், காலாடி, வத்திரியன் மற்றும் தேவேந்திர குலத்தான் ஆகிய சாதிகளை ஒன்றினைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற புதிய அமைப்பு உருவாக்க வேண்டாம் என்பதாகும். மேலும் பட்டியலின அமைப்பில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சாதியை நீக்கி அதனை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்து இருந்தார். இந்த கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் இராமதாஸ் வெகுவாக வரவேற்றும், பாராட்டியும் இருந்தார்.

இது சம்பந்தாமாக ஆதிதிராவிடர் பட்டியலில் உள்ள ஆறு சாதி மற்றும் பட்டியலின குழுவில் உள்ள தேவேந்திர குலத்தான் ஆகிய சாதிகளை ஒன்றினைப்பது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதில் உள்ள சாத்திய கூறுகள் மற்றும் சாதகபாதகங்களை தெரிவிக்க தமிழக அரசு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கூடுதல் செயலர், ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், ஆதி திராவிடர் நல இயக்குநர் உறுப்பினர் & செயலராகவும் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு சம்பந்தப்பட்ட இன மக்களிடம் ஆலோசனை நடத்தியும், பழங்கால வரலாறு குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தும், இந்தக் கோரிக்கைகளை ஏற்பது குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் "ஹன்ஸ்ராஜ் வர்மா" குழு தனது நிலைப்பாடுகளை அரசிடம் சமர்பித்து உள்ளது. அதன்படி, தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குடும்பன், பன்னாடி, கடையன், காலாடி, பள்ளர், வத்திரியன் மற்றும் தேவேந்திர குலத்தான் ஆகிய 7 சாதிய பிரிவுகளை ஒன்றினைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற துணைப் பிரிவு உருவாக்கப்படும் என்றும், இதற்கான பரிந்துரையை மாநில அரசு, மத்திய அரசுக்கு அனுப்ப தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த புதிய பிரிவினருக்கும் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் இட ஒதுக்கீடே பின்பற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

You'r reading தேவேந்திரகுல வேளாளர் பிரிவை சட்டப்பூர்வமாக்க, மாநில அரசுக்கு குழு பரிந்துரை! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை