பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இயந்திரங்கள் உடைந்து விபத்து

by Balaji, Feb 2, 2021, 20:37 PM IST

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இன்று மாலை இயந்திரங்கள் திடீரென உடைந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆலையின் பிரதான சாதனமான நான்கு கிரீசலைட்டர்களும் (கரும்புச் சாறு பாகு பதத்தில் காய்ச்சப்பட்டு கொண்டு செல்லப்படும் சாதனம்) உடைந்து இங்சக்க்ஷன் பேனலில் விழுந்தது. இதனால் இங்சக்க்ஷன் பேனலும் உடைந்து சேதமானது. இந்த சம்பவத்தால் கிரீசலைட்டர்களில் வந்து கொண்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சர்க்கரை பாகு இங்சக்‌ஷன் பேனலில் ஓடிய தண்ணீருடன் கலந்து தரையில் பாய்ந்து வீணானது.

மழைக்காலத்தில் வரும் வெள்ளம்போல் பதப்படுத்தப்பட்ட கரும்புச்சாறு ஆலையை சுற்றி பாய்ந்து வீணானது. இந்த ஆலையில் உள்ள எந்திரங்கள் 1977 மற்றும் 1990 ல் நிறுவப்பட்டதாகும். இந்த இயந்திரங்களில் ஆயுள் காலம் முடிவடைந்த நிலையில் இதை மாற்ற வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. ஆலையில் இந்த உற்பத்தி பகுதியில் பகுதியில் இயங்கும் பேஃன்களும் பழுதடைந்துள்ளது உள்ளது. அதை மாற்ற வேண்டும் என பலமுறை சுட்டிக்காட்டப்படும் இதுவரை மாற்றப்படவில்லை.

இதன் காரணமாகவே இந்த விபத்து நடந்திருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் அப்பகுதி கரும்பு விவசாயிகள். முழுக்க முழுக்க அதிகாரிகளின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது . நல்லவேளையாக இந்த விபத்தில் ஆலையில் பணி புரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சர்க்கரை ஆலையில் தினமும் 3 ஆயிரம் டன்னுக்கு மேல் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த பத்தியின் மூலம் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டிருக்கிறது.

You'r reading பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இயந்திரங்கள் உடைந்து விபத்து Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை