பசிக்கு இலவசம் சாப்பிட ரூ.20-க்கு பிரியாணி... மனிதநேயத்தின் மறுஉருவாய் திகழும் இளம்பெண்!

by Sasitharan, Feb 4, 2021, 18:41 PM IST

கோவையில் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு பசியை போக்கும் வகையில் இலவசமாகவும், மற்றவர்களுக்கு 20 ரூபாய்க்கும் கறி இல்லாத பிரியாணியை இளம்பெண் ஒருவர் வழங்கி வருகிறார். கோவை மாவட்டம் புளியகுளம் பகுதியில் சப்ரினா என்ற பட்டதாரி இளம்பெண் சாலையோரம் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆனால், தனது உணவகத்தை மனித நேயத்துடன் சப்ரினா நடத்தி வருகிறார்.

ஏனென்றால், சப்ரினா தனது கடை முன்பாக வைக்கப்பட்டுள்ள பெட்டி ஒன்றில் குஸ்கா பொட்டலங்களை வைத்து, "பசிக்கின்றதா. எடுத்துக்கோங்க" என்று எழுதி வைத்துள்ளார். பெட்டியில் வைக்கப்பட்டுள்ள உணவு பார்சல்களை ஆதரவற்ற ஏழைகள் இலவசமாக எடுத்துச் சென்று சாப்பிடுகின்றனர்.

இது தொடர்பாக சப்ரினா கூறுகையில், 20 ரூபாய்க்கு சாதாரண பிரியாணி விற்பனை செய்வதால் நட்டம் ஏதுமில்லை என்றும் ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக கறி இல்லாத பிரியாணி வழங்க, உதவும் மனம் இருந்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளார். சப்ரினாவில் இந்த செயலை நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

You'r reading பசிக்கு இலவசம் சாப்பிட ரூ.20-க்கு பிரியாணி... மனிதநேயத்தின் மறுஉருவாய் திகழும் இளம்பெண்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை