திமுக உட்கட்சிப்பூசல்.. காந்திசெல்வன் மீது தலைமையில் குவியும் புகார்..

திமுகவில் தற்போது சீட் பிடிப்பதில் எழுந்த போட்டியால், முக்கியப் புள்ளிகள் மீது தலைமைக்கு புகார்கள் பறக்கின்றன.அதிமுக உட்கட்சிப் பூசல்கள் பல திசைகளில் சென்று கொண்டிருப்பதால், இவர்கள் வெற்றி பெற்றால் இன்னொரு 5 ஆண்டுகளுக்கு இப்படித்தான் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது. இந்த சூழலில் எப்படியும் இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்து விடும் என்று அந்த கட்சியினர் அதீத நம்பிக்கையில் உள்ளனர். இதனால், திமுகவில் இப்போது எம்.எல்.ஏ. சீட் வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது.

அதன் காரணமாக, பலர் மீது இருக்கும் பழைய வழக்குள், புகார்களை தூசி தட்டி தலைமைக்கு அனுப்பி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திசெல்வனுக்கு அம்மாவட்ட திமுகவில் எதிர்ப்பு காணப்படுகிறது. அதிருப்தியாளர்கள் தற்போது காந்திசெல்வன் மீது ஒரு புகாரை திமுக தலைமைக்கு அனுப்பியுள்ளனர். அதில், நாமக்கல் நகராட்சிக்காக பொதுமக்களால் நிதி திரட்டி வாங்கப்பட்ட நிலத்தை காந்திச்செல்வன் விற்பனை செய்துவிட்டதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

திமுக அலுவலகத்திற்குக் கட்சியின் நிதியைக் கொண்டு வாங்கப்பட்ட கட்டிடத்தைத் தனது தந்தை மற்றும் சகோதரர் பெயருக்கு மாற்றி விட்டார் என்றும் புகார் கூறியிருக்கிறார்கள்.நாமக்கல் நகராட்சித் தலைவராக காந்திசெல்வன் இருந்த போது, புதிதாக நீரேற்று நிலையம் கட்டுவதற்கு இடம் வாங்கப்பட்டிருக்கிறது. இதற்கு அப்போது நகர்மன்ற உறுப்பினர்களும், சந்தைப்பேட்டை புதூர், ராமாபுரம் புதூர் மக்களும் சுமார் ரூ.7 லட்சம் வரை நிதி அளித்திருக்கிறார்கள். அந்த நிதியில் இடம் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால், நீரேற்று நிலையம் நகராட்சிக்கு சொந்தமான வேறொரு இடத்தில் அமைக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, நகராட்சிக்காக வாங்கிய ஐந்தே முக்கால் ஏக்கர் நிலத்தைச் சமீபத்தில் சத்தமில்லாமல் காந்தி செல்வன் விற்று பணத்தை எடுத்துக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. இது பற்றித்தான் திமுகவில் காந்திசெல்வனின் அதிருப்தி கோஷ்டி, கட்சித் தலைமைக்குப் புகார் அனுப்பியுள்ளதாம்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!