சீல் வைக்கப்பட்ட சாயப்பட்டறைகள் அதிகாரிகள் துணையோடு மீண்டும் இயக்கம்: விவசாயிகள் கொந்தளிப்பு

by Balaji, Feb 9, 2021, 19:24 PM IST

ஈரோடு மாவட்ட சாயப்பட்டறைகள் மீது அதிகாரிகளின் கரிசனம். மூடப்பட்ட ஆலைகளும் இயங்கியதால் விவசாயிகள் கொதிப்பு. மூன்றாம் நாளாக சாயப்பட்டறைகளில் விவசாயிகள் ஆய்வு... அதிகாரிகளால் நேற்று சீல் வைக்கப்பட்ட ஆலைகள் மீண்டும் இயங்குவதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி. ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் ஏராளமான சாயப்பட்டறைகள் உள்ளன. இந்தப் பட்டறையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மண்ணில் குழாய் அமைத்து திருட்டுத்தனமாக காலிங்கராயன் கால்வாயில் கலப்பதை விவசாய சங்கத்தினர் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட மேற்பட்ட சாயப்பட்டறைகளுக்கு சீல் வைத்தனர். மூன்றாவது நாளாக இன்றும் விதிமீறிய ஆலைகளை விவசாயிகள் ஆய்வு செய்தபோது சீல் வைக்கப்பட்ட பல ஆலைகள் சீல் உடைக்கப்பட்டும் இயங்கி வந்தது தெரியவந்தது சில ஆலைகளில் பின்புற வாசல் வழியாக தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆலய தொடர்ந்து இயங்கி வந்தது . இதைக்கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சீல் வைக்கப்பட்ட ஆலைகளில் இருந்து பின் வாசல் வழியாக இயந்திரங்களை ஆலை உரிமையாளர்கள் மாற்று இடங்களுக்கு எடுத்து சென்று விட்டதாகவும் விவசாயிகள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் புகார்களை காதில் வாங்கியதோடு சரி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை மாறாக ஆலை அதிபர்களுக்கு கரிசனம் காட்டுவதிலேயே குறியாக இருந்தனர் என்று விவசாயிகள் கொதித்துப் போயுள்ளனர். இன்று இங்கு வந்த அதிகாரிகள் ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், சீல் அகற்றிய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

You'r reading சீல் வைக்கப்பட்ட சாயப்பட்டறைகள் அதிகாரிகள் துணையோடு மீண்டும் இயக்கம்: விவசாயிகள் கொந்தளிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை