அரசு விழாக்கள் நடக்கும் போது ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உரியமுறையில் அழைப்பிதழ் கொடுத்து அழைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தாலுகாவின் பஞ்சாயத்து கவுன்சிலர் மாலா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு.ஜூன் 7ஆம் தேதி கரம்பக்குடி ஒன்றிய பஞ்சாயத்து கவுன்சில் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இதில், கரம்பக்குடி ஒன்றிய பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றுபவர்கள் எனக்குத் தகவல் தெரிவிக்காமல் சில தீர்மானங்களை மாற்றி புதிய தீர்மானங்களை வைத்துள்ளார்.
மேலும் என்னை அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை. முறையான அழைப்பும் இல்லை.
அரசு ஆணையின் படி உரிய அழைப்பு மற்றும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று உள்ளது. ஆனால் நான் பெண் என்பதால் எனக்கு முறையான தகவல் மற்றும் அழைப்பும் அளிக்கப்படவில்லை.எனவே பஞ்சாயத்து மற்றும் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனத் தனது மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் இனிவரும் காலங்களில் அரசு விழாவின் போது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலரை முறையாக அழைப்பிதழ் கொடுத்து அழைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.