தேர்தல் : தென்காசியில் தமிழக கேரள அதிகாரிகள் ஆலோசனை

by Balaji, Feb 23, 2021, 18:37 PM IST

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இரு மாநில எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தகவல் பரிமாற்றங்கள் குறித்து தமிழக கேரள அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.இதில்கொல்லம் மாவட்ட ஆட்சியர் அப்துல் நாசர், எஸ். பி. ரவி,
தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன், கொல்லம் மாவட்ட வன அலுவலர் சசிகுமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தென்காசி மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன்,தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது அதேபோல் சோதனை சாவடிகளை எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்பது குறித்தும் இதற்காக ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட உள்ளது. காவல்துறை தரப்பில் சோதனைகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல் இரு மாநிலங்களிலும் ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் குறித்த நடவடிக்கைகளை எப்படி செயல்படுத்த வேண்டும்? தகவல்கள் பரிமாற்றம் குறித்து மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நுண்ணறிவு பிரிவு தகவல்களை எப்படி பரிமாறிக்கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்காக காவல்துறை, கலால் துறை, வனத்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளைக் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றார்.

You'r reading தேர்தல் : தென்காசியில் தமிழக கேரள அதிகாரிகள் ஆலோசனை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை