பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி பழனியில் 108 பேர் மொட்டை

by Balaji, Feb 23, 2021, 21:52 PM IST

எடப்பாடி பழனிச்சாமியே மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுகவினர் 108 பேர் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்தி செலுத்தினர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரம் உள்ளிட்ட 108 பேர் பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திகடன் செலுத்தி வழிபாடு. நாமக்கல் தொகுதி முன்னாள் எம். பி . பி. ஆர். சுந்தரம் தலைமையில் இன்று நாமக்கல்லைச் சேர்ந்த அதிமுகவினர் 108 பேர் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்று எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராக மீண்டும் வர வேண்டி மலை அடிவாரத்தில் 108 பேரும் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மலைக்கோயில் சென்று வெள்ளி விநாயகர் சன்னதியில் ஐந்து அடி நீள வேல் வைத்து வழிபட்டனர். பழனி முருகன் கோயிலில் வைத்து வழிபட்டு செய்த வேலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கொடுக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

You'r reading பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி பழனியில் 108 பேர் மொட்டை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை