திரிஷ்யம் 2 வுக்கு பாராட்டு கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு மோகன்லால் நன்றி

திரிஷ்யம் 2 படத்தைப் பார்த்து விமர்சனம் செய்த பிரபல கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார். கடும் பணிச்சுமைக்கு இடையிலும் முதல் வாரத்திலேயே படத்தைப் பார்த்து விமர்சனம் செய்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள் என்று மோகன்லால் தன்னுடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 19ம் தேதி அமேசான் பிரைமில் வெளியான திரிஷ்யம் 2 மலையாள சினிமாவில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியானதால் 200க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்தின் முதல் பாகம் ஏற்கனவே தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆனது.

அது மட்டுமல்லாமல் சிங்களம் மற்றும் சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த திரிஷ்யம் 2வும் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்வதற்கு பேசப்பட்டு வருவதாக இந்தப் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். சீன மொழியிலும் திரைப்படமாக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தை பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார். இதுகுறித்து அஷ்வின் தன்னுடைய டுவிட்டரில் கூறியது: அமேசான் பிரைமில் வெளியான உடனேயே த்ரிஷ்யம் 2 படத்தை நான் பார்த்து விட்டேன். இந்தப் படத்தில் ஜார்ஜ் குட்டியாகவே மோகன்லால் வாழ்ந்துள்ளார். நீதிமன்றத்தில் கிளைமாக்ஸ் சீனில் வந்த டிவிஸ்டை பார்த்து நான் சத்தம் போட்டு சிரித்து விட்டேன்.

இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் முதல் பாகத்தையும் சேர்த்து பாருங்கள். மிகச்சிறந்த படம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தன்னுடைய படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்த அஷ்வினுக்கு மோகன்லால் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். 'நீங்கள் இப்போது மிகவும் பிசியாக இருக்கும் நேரம் என எனக்கு தெரியும். ஆனாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு திரிஷ்யம் 2 படத்தை முதல் வாரத்திலேயே பார்த்து பாராட்டு தெரிவித்ததற்கு உங்களுக்கு நான் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இந்தப் படத்தைப் பாராட்டியது எங்களை போன்ற கலைஞர்களுக்கு மிகவும் உற்சாகத்தை தந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளதை அஷ்வின் தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :