சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசு அவசரகதியில் அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது அரசுக்கு துளியும் அக்கறை இல்லை என தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் தியாகராஜன் குற்றச்சாட்டினார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் செங்கல்பட்டில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 9, 10, 11 ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தேர்தலை கருத்தில் கொண்டு அவசர கதியில் அறிவிக்க பட்டுள்ளது. பள்ளிகளை பிறக்கும் முன்பே முன்பு இந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், பாட திட்டங்களை குறைக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டது நிச்சயம் மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்கும் என பள்ளி கல்விதுறை அமைச்சர் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் இன்று தமிழக அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா தொற்று அதிகம் இருந்த நேரத்தில் அவசர கதியில் பள்ளிகளை திறந்த அரசு தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து.
அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளது.அதே சமயம் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா அல்லது வேண்டாமா, ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா என்பதை தெளிவுபடுத்த அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. தேர்தலை முன்வைத்தே அரசு இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. பாட திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களும் கொரோனாவுக்கு பிறகு சிறப்பு வகுப்புகள் நடத்தியுள்ளனர். இந்த ஆசிரியர்களின் உழைப்பு வீணாகியுள்ளது. கல்வித்துறை மற்றும் மாணவர்களின் மீது அக்கறை இல்லாமல் உள் நோக்கத்துடன் தேர்வுகளை அரசு ரத்து செய்துள்ளது என்றார்.