இங்கிலாந்து 80 ரன்களில் ஆல்-அவுட் இந்தியாவுக்கு 49 ரன்கள் இலக்கு 2வது நாளிலேயே போட்டி முடிவுக்கு வருகிறது

by Nishanth, Feb 25, 2021, 21:23 PM IST

அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் 2வது நாளிலேயே போட்டி முடிவுக்கு வருகிறது. இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 81 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 49 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. உணவு இடைவேளையின் போது இந்தியா விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது.அகமதாபாத்தில் நேற்று தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 112 ரன்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அக்சர் படேல் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன் பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய வீரர்களும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா 145 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் ஜோ ரூட் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளையும், லீச் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது.

இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 81 ரன்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் மீண்டும் சிறப்பாக பந்து வீசிய அக்சர் படேல் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த டெஸ்ட் போட்டியில் அக்சர் படேல் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 49 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. உணவு இடைவேளையின் போது இந்தியா விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது.

You'r reading இங்கிலாந்து 80 ரன்களில் ஆல்-அவுட் இந்தியாவுக்கு 49 ரன்கள் இலக்கு 2வது நாளிலேயே போட்டி முடிவுக்கு வருகிறது Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை