ஒரு ஆண் தனது காதலியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்துவிட்டு ஏமாற்றினால் அது பாலியல் வன்கொடுமையில் சேராது என்று உத்திரபிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தனது காதலர் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
என்னை காதலிப்பது போல் நடித்து ஆசைவார்த்தைகள் கூறி உல்லாசமாக இருந்துவிட்டு இரண்டு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று ஏமாற்றியதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து நீதிபதிகள் ஒரு நம்பிக்கை கொடுத்து விட்டு அதை பின்பற்றவில்லை என்றால் அது தவறாகாது. அதுவும் இரண்டு பேரும் சம்மதத்துடன் உடல் உறவில் இருந்ததால் அது பாலியல் குற்றத்திற்கு கீழ் ஏற்றுக்கொள்ளப்படாது. அந்த வகையில் அவர் மேல் கொடுக்கப்பட்ட புகார் அனைத்தையும் ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.