தமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா?

by Madhavan, Apr 10, 2021, 19:29 PM IST

தமிழகத்தில் இன்று மேலும் 5,989 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 23 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவி ஓராண்டுக்கு மேலாகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கி போக போக பெரிய அளவில் இருந்தது. முக கவசம் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தொற்றின் தாக்கம் குறைந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனாவில் இரண்டாவது அலை பரவி வருகிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் இன்று 5,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 26 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 1,977 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் தற்போது 37,673 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 1,952 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 76 ஆயிரத்து 257 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது.

You'r reading தமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை