தமிழ்நாட்டில் கொரோனாவின் 2 ஆம் அலையை கட்டுப்படுத்த நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
கொரேனா 2 ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்காக புதிய கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
புதிய கட்டுப்பாடுகள் பின்வருமாறு:-
- தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.
- இரவு நேரங்களில் தனியார், பொது பேருந்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன சேவைக்கு அனுமதி இல்லை.
- இரவு நேரங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை.
- அவசர மருத்துவ தேவை, விமானம் மற்றும் ரயில் நிலையங்களுக்குச் செல்ல மட்டும் இரவு நேரத்தில் வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனம் ஆகியவற்றுக்கு அனுமதி.
- அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், மருந்தகம், பத்திரிகை விநியோகம், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்த்தி போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி.
- சரக்கு வானங்கள், எரிபொருள் வானங்கள் ஆகியவையும் இரவு நேரங்களில் செயல்பட அனுமதி.
- அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேரத்தில் செயல்பட அனுமதி.
- பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி.
- ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவில் செயல்பட அனுமதி.
- ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு.
- ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை.
- முழு ஊரடங்கு நாளில் உணவகங்கள் காலை 6-10, பகல் 12 -3, மாலை 6 - 9 வரை பார்சல் வழங்க அனுமதி.
- உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி.
- இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுமதி இல்லை.
- முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் உட்பட அனைத்து நாட்களிலும் திருமண நிகழ்வுகளில் 100 பேர், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி. அங்கு கொரோனா வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுவது உறுதி செய்ய வேண்டும்.
- அனைத்து நாட்களிலும் மாநிலத்திலுள்ள அனைத்துச் சுற்றுலா தலங்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை.
- மாநிலத்திலுள்ள கடற்கரைப் பகுதிகளுக்கும் செல்ல பொதுமக்களுக்குத் தடை.
- பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
- ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% வீட்டிலிருந்த பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், வணிக வலாகங்கள், ஷோ ரூம்கள், நகை மற்றும் ஜவளி கடைகள் ஆகியவை இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி.
- மதம் சார்ந்த திருவிழாக்கள், கூட்டங்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தால், 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி.
- புதிதாகக் குடமுழுக்கு, திருவிழாக்கள் நடத்தத் தடை.
- தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது.
- செயல்முறைத் தேர்வுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும்.
- கல்லூரி, பல்கலைக்கழக பாடங்களை ஆசிரியர்கள் ஆன்லனை மூலம் எடுக்க வேண்டும்.
- கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைன் மூலம் மட்டும் நடத்தப்பட வேண்டும்.
- கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதி.
- கோடைக் கால முகாம்கள் நடத்தத் தடை.