நிர்மலா தேவி விவகாரத்தில் சரணடைந்த ஆராய்ச்சி மாணவர்!

Advertisement

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க முயற்சி செய்த தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஆராய்ச்சி மாணவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகள் சிலரை, பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி நிர்மலா தேவி வற்புறுத்தும் ஆடியோ டேப் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆளுநர் அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுவதாகவும், அவரை பின்னிருந்து இயக்கியவர்கள் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த வழக்கின் பின்னணி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். வெள்ளியன்று மதியம் 2 மணி முதல் காவலில் எடுத்துவிசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் பேராசிரியர் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சனிக்கிழமை சிபிசிஐடி காவல்துறையில் ஒரு குழுவினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்று சோதனை நடத்தினர். பதிவாளர், தேர்வாணையர் அலுவலகங்களில் இருந்து சிலமுக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நிர்மலாதேவி பல்கலைக்கழகம் வந்து சென்ற சி.சி.டி.வி. பதிவுகளை சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

நிர்மலா தேவியிடம், சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, யாருடைய தூண்டுதலின் பேரில் மாணவிகளிடம் பேசினீர்கள்? என்று கேட்டபோது, காமராஜர் பல்கலைகழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர்தான் ஆசை வார்த்தைக் கூறி தன்னை தூண்டியதாக கூறியிருந்தார்.

இதனையடுத்து நிலையில் நிர்மலா தேவி கூறிய பேராசிரியர் உட்பட 2 பேர் தலைமறைவாகி உள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை பேராசிரியர் முருகன், முன்னாள் மாணவர் கருப்பசாமி ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தேடப்பட்டு வந்த உதவி பேராசிரியர் முருகனை, சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகனிடம் போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர். இதே புகாரில் முன்னாள் மாணவர் கருப்பசாமியை காவல் துறையினர் தேடி வந்தனர்.

இதனிடையே மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கருப்பசாமி இன்று காலை சரண் அடைந்துள்ளார். அவருக்கு 27ஆம் தேதி வரை காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>