16 பேரை கமல்ஹாசனால் காப்பாற்ற முடியவில்லை - ஜெயக்குமார் கிண்டல்

by Lenin, Apr 25, 2018, 19:08 PM IST

கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து “நாளை நமதே” என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். மேலும், தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்ற பெயர் சூட்டினார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியில் இருந்து வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் திடீரென விலகியுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும், அதனால் அந்த கட்சியில் இருந்து விலகியதாகவும் வழக்கறிஞர் ராஜசேகர் கூறியுள்ளார்.

கட்சி தொடங்கிய ஒருசில மாதங்களிலேயே முக்கிய பிரபலம் ஒருவர் கட்சியில் இருந்து விலகியுள்ளது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல்ஹாசன் நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் ஆட்சியில் காவிரி நீரை அடகு வைத்தது திமுக தான். தமிழக உரிமைகளை முழுமையாக தாரைவார்த்து விட்டு தற்போது திமுகவினர் பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

வன்முறை என்ற அளவுகோலை போராட்டம் தாண்டக்கூடாது, சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading 16 பேரை கமல்ஹாசனால் காப்பாற்ற முடியவில்லை - ஜெயக்குமார் கிண்டல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை