பிரபல மழலைக்குரல் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்

Apr 25, 2018, 18:23 PM IST

பிரபல பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

தமிழ் திரையுலகில், 1950களில் குழந்தை நட்சத்திரங்களுக்கு பாடல்களை பாடி பிரபலமானவர் எம்.எஸ். ராஜேஸ்வரி. கமல்ஹாசன் சிறுவனாக அறிமுகமான களத்தூர் கன்னம்மா படத்தில் இடம்பெற்ற அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடலை பாடியது எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்கள் தான்.

இதேபோல், மியா மியா பூனைக்குட்டி, ஓ ரசிக்கும் சீமானே, கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடியதும் எம்.எஸ்.ராஜேஸ்வரி தான். இதனால், இவர் மழலைக்குரல் பாடகி என்று அழைக்கப்படுவார்.

இவருக்கு 87 வயது ஆன நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எம்.எஸ்.ராஜேஸ்டரி இன்று மரணமடைந்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பிரபல மழலைக்குரல் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை