போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்த ஐ.பெரியசாமி!

by Sasitharan, May 2, 2021, 20:58 PM IST

தமிழகத்தில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதிலும் திமுக 120 இடங்களுக்கும் மேற்பட்ட இடங்களை வென்று , தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இதன்மூலம் திமுகவின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவது உறுதியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கையின், தற்போதைய நிலவரப்படி, வெற்றி + முன்னிலை என திமுக கூட்டணி 158 இடங்களை வசப்படுத்தும் நிலையில் உள்ளது.

இதில், திமுகவின் நட்சத்திர வேட்பாளர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழக்க செய்தார். அவர் மட்டும் 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவராக ஐ.பெரியசாமி இருக்கிறார். இவருக்கு அடுத்து திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏ.வ.வேலு 94673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி இரண்டாவதாக அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வர் பழனிசாமி 92,268 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

You'r reading போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்த ஐ.பெரியசாமி! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை