`எப்பவுமே தொகுதி பக்கம் தான் இருக்கப் போறேன்.. நெட்டிசனை நெகிழவைத்த விஜய் வசந்த்!

by Sasitharan, May 3, 2021, 21:24 PM IST

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்த் அவர்களின் மகன் விஜய் வசந்த் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதற்கிடையே, டுவிட்டரில் பயனர் ஒருவர், விஜய் வசந்தை குறிப்பிட்டு ``அடுத்த எலக்சன்லயும் வின் பண்ணனும் நினைச்சிங்கனா தொகுதி பக்கம் அப்பப்ப தலைய காட்டுங்க ப்ரோ" என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு பதில் கொடுத்த விஜய் வசந்த், ``அப்பப்ப இல்ல ப்ரோ எப்பவுமே தொகுதி பக்கம் தான் இருக்கப் போறேன். இது அடுத்த எலக்சன்ல வெற்றி பெறுவதற்காக அல்ல. இந்த எலக்சன்ல நீங்க என் மேல் வைத்த நம்பிக்கைக்கு" என்று பதில் கொடுத்து இருக்கிறார்.

இதேபோல் இன்னொரு பயனர் ஒருவர், ``வாழ்த்துக்கள் அண்ணா.. வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறோம் . . உதவி செய்யுங்கள்.. இப்படிக்கு படித்து வேலை இல்லாமல் இருக்கும் கன்னியாகுமரி இளைஞர்கள்" என்று பதிவிட, அதற்கு ``கண்டிப்பாக நண்பர்களே. நமது மாவட்டத்தில் வேலை வாய்ப்புகள் பெருக முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறியிருக்கிறார். இதேபோல் திரைத்துறையை சேர்ந்த பலரும் விஜய் வசந்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

You'r reading `எப்பவுமே தொகுதி பக்கம் தான் இருக்கப் போறேன்.. நெட்டிசனை நெகிழவைத்த விஜய் வசந்த்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை