இனி குடிக்கவே மாட்டேன்.. இறுதிச்சடங்கில் கதறிய தினேஷின் தந்தை

Advertisement

என் மகன் எவ்வளவோ கூறியும் நான் கேட்கவில்லை.. என் மகனுக்காக இனி நான் குடிக்கவே மாட்டேன் என்று தற்கொலை செய்துக் கொண்ட தினேஷின் தந்தை கதறி அழுத காட்சி மனதில் கனத்தை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கே.ரெட்டியப்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் தினேஷ் நல்லசிவன்(17). ப்ளஸ் 2 தேர்வு எழுதியுள்ள தினேஷ் நேற்று முன்தினம் நெல்லையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தூத்துக்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அப்போது, அவரிடம் இருந்து கிடைத்த கடிதத்தில், தனது தந்தை மாடசாமி மதுப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் தற்கொலை செய்துக் கொள்கிறேன். நான் இறந்தப்பிறகாவது தந்தை குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் தமிழக அரசு மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என்று எழுதியிருந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தினேஷின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்தனர். அப்போது, மகனின் உடலை பார்த்து மாடசாமி குடிப்பழக்கத்தால் இன்று நான் என் மகனை இழந்துவிட்டேன் என்று கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது.

பின்னர் மாடசாமி கூறியதாவது: குடிப்பழக்கத்தை கைவிடும்படி எனது மகன் என்னிடம் எவ்வளவோ மன்றாடி பார்த்தான். ஆனால், என்னால் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. இதன் விளைவால், டாக்டராக வேண்டிய எனது மகனை இழந்து தவிக்கிறேன். எனது சகோதரர்கள் நல்ல முறையில் அவனை படிக்க வைத்தனர். அவன் இந்த துயர முடிவை எடுக்காமல் வாழ்ந்து காட்டிருக்க வேண்டும். என் மகனின் விருப்பப்படி நான் இனி குடிக்க மாட்டேன். அப்போது தான் அவனது ஆன்மா சாந்தி அடையும். இவ்வாறு அவர் கூறினார்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>