கர்நாடகா தேர்தல் - ரூபாய் 120 கோடி பணம், நகைகள் பறிமுதல்

கர்நாடகா தேர்தல் ரூ .120 கோடி பண நகை பறிமுதல்

by Rekha, May 6, 2018, 07:54 AM IST

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் மே 12ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சந்தேசத்துக்கிடமான பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தும், ஓட்டுகளை பெற முயற்சியும் நடந்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தின் பல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 67.27 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் ரூபாய் 23.36 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்களையும், ரூபாய் 43.17 கோடி மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். ரூபாய் 39.80 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் லேப்டாப், தையல் எந்திரங்கள், குக்கர் உள்பட ரூபாய் 18.57 கோடி மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட  பணம் மற்றும் பொருட்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ரூபாய் 32.54 கோடிக்கான பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்தது. எனவே அந்த பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள ரூபாய்120 கோடிக்கு அதிகமான பணம் மற்றும் பொருட்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன. மேலும் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் மைய அதிகாரிகள் தீவிர பணியாற்றி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading கர்நாடகா தேர்தல் - ரூபாய் 120 கோடி பணம், நகைகள் பறிமுதல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை