நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு:13.26 லட்சம் பேர் எழுதுகின்றனர்

May 6, 2018, 08:15 AM IST

மருத்துவ படிப்பில் சேர நடத்தப்படும் நீட் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில், நாடு முழுவதும் 13.26 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான தேசிய ததகுதி நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த 2016ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. கடந்த ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது முறையாக நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. நாடு முழுவதில் இருந்தும் 13.26 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழக நிலவரப்படி, இங்கு மொத்தம் 170 மையங்களில் 1,07,480 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதேபோல், சென்னையில் மட்டும் 49 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 33,842 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் இடம் கிடைக்காத நிலையில், சுமார் 1500 மாணவ மாணவிகள் கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதுகின்றனர். இதனால், தமிழக மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

மேலும், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு 7.30 மணிக்கே சென்று விட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜீன்ஸ, டி&சர்ட், வாட்சி, மோதிரம், கம்மல், வளையல், செயின், ஷ¨, முழு கை சட்டை, பெரிய பட்டன் வைத்த சட்டை உள்ளிட்டடை அணிந்து மையத்தினுள் வரக்கூடாது என்று அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

தேர்வு மையத்திற்குள் வரும்போது ஒரு போட்டோ மற்றும் ஹால் டிக்கெட் மட்டுமே கொண்டு வர வேண்டும். இதை தவிர, தேர்வு அறைக்குள் செல்வதற்கு முன்பு கருவிகள் கொண்டு சோதனை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு:13.26 லட்சம் பேர் எழுதுகின்றனர் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை