ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம்: யாகத்துடன் அடிக்கல் நாட்டு விழா

May 7, 2018, 08:45 AM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைப்பதற்காக இன்று காலை யாகபூஜைகள் முடிந்து, அடிக்கல் நாட்டு விழா  நடைபெற்றது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இவரது உடல் பின்னர், மெரினாவில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே ரூ.50.80 கோடி செலவில் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது. இதற்காக, டெண்டரும் விடப்பட்டன.

இந்நிலையில், இன்று காலை ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது. அதன்படி, இன்று காலை 6.30 மணியளவில் யாகத்துடன் பூஜைகள் நடைபெற்றது.

இதில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் யாகப்பூஜையில் பங்கேற்றனர். இவர்களை தவிர கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

இதைதொடர்ந்து, காலை 9 மணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டுகிறார். இதைதொடர்ந்து, நினைவு மண்டபம் கட்டுவதற்கான பணி தொடங்கப்படும். இவ்விழாவில், அமைச்சர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம்: யாகத்துடன் அடிக்கல் நாட்டு விழா Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை