மக்கள் நீதி மய்யத்தின் கிழக்கு மண்டல கலந்தாய்வு கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் சரவணன் ஸ்ரீபிரியா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில உறுப்பினர்கள் சவுந்திரராஜன், சிவா மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்.
மக்கள் நீதி மய்யம் கலந்தாய்வு கூட்டத்தில் ஸ்ரீபிரியா செய்தியாளர்கள் பேட்டியில் கூறியது, அதில், காவிரி பிரச்சினையில் அடிக்கடி எங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம். மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி குறித்து பேசினோம். மத்திய அரசின் செல்வாக்கில் தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் கூட பிரதமரை சந்திக்க முடியவில்லை.
மேலும் காவிரி பிரச்சினை தொடர்பாக எங்களுடைய கருத்துக்கள் அடங்கிய வீடியோ பதிவு பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனை பார்த்துவிட்டு பிரதமர் எங்களை அழைப்பார் என்று நம்புகிறோம். திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி பிரச்சினை குறித்து தான் முழுமையாக பேசப்பட்டது. காவிரி தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த தீர்ப்பிற்கு பிறகு எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம்.
கிராம சபை கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் பங்கேற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தினோம். அடுத்து வருகிற ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தில் இன்னும் அதிகமான மக்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்க்கை, வாக்கு எங்கள் ரகசியம். இதை நாங்கள் தெரிவிக்க மாட்டோம். என்று கூறினார்.