நீட் தேர்வு வினாக்களில் 49 பிழைகள்: மதிப்பெண் வழங்க கோரிக்கை

Advertisement

நீட் தேர்வில் தமிழக வினாத்தாளில் கேட்கப்பட்ட 180 வினாக்களில் 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டருப்பதாகவும், இதனால் அதற்கான மதிப்பெண் வழங்க வேணடும் என்றும் மாணவர்கள் சார்பில் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடு முழுவதும் கடந்த 6ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. பல எதிர்ப்புகளை மீறி தமிழக மாணவர்களுக்கும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சுமார் 1500 மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதால் பெரும் இன்னல்களுடன் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், நீட் தேர்வில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் மொத்தமுள்ள 180 வினாக்களில் 49 வினாக்கள் தவறாக மொழிபெயர்ப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை, ஏழை மாணவர்களுக்காக இலவசமாக நீட் தேர்வு பயிற்சி அளித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தவறுகளை கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் ராம் பிரகாஷ் என்பவர் கூறியதாவது:

நீட் தேர்வுக்கான வினாத்தாள் மொழி பெயர்ப்பு செய்யும்போது பல பிழைகள் ஏற்பட்டுள்ளன. ''cheetah'' என்பதை மொழிபெயர்ப்பு செய்யும்போது சிறுத்தை என்றுதான் வர வேண்டும். ஆனால், 75வது வினாவில் சீதா என்று கேட்டுள்ளனர்.

மற்றொரு பிழை 77வது வினாவில் ஏற்பட்டுள்ளது. அதாவது, '''multiple allele' என்ற 'pala kutu allelgal' என்று அச்சாகி உள்ளது. 'pal kootu,' என்று இருந்திருக்க வேண்டும். இது உயிரியல் தொழில்நுட்ப வார்த்தையாகும். இதேபோன்ற பிழை 47வது வினாவிலும் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிழைகள் அனைத்துக்கும் சேர்த்து நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் கொடுக்க வேண்டும். 

தமிழில் என்சிஈஆர்டி புத்தகம் இல்லை. ஆதலால் இதுபோன்ற பிழைகள் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வார்த்தைகளை மொழி பெயர்ப்பு செய்வதில் சிபிஎஸ்இ தவறு செய்துள்ளது. கடந்தாண்டு ஆங்கிலத்தில் வேறு வினாத்தாளும், தமிழக மாணவர்களுக்கு வேறு வினாத்தாளும் வழங்கப்பட்டு இருந்தது. வரும் ஆண்டுகளில் பிழைகள் நிகழக் கூடாது என்றே அப்போதே உச்சநீதிமன்றம் கண்டித்து இருந்தது. ஓரிரு இடங்களில் பிழைகள் நடந்து இருந்தால் பரவாயில்லை. 49 இடங்களில் பிழைகள் எவ்வாறு ஏற்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
alya-manasa-dances-with-vj-prathu-for-top-tucker-song-raja-rani-2
நடிகை ஆல்யா மானசா டாப் டக்கர் டான்ஸ்!
actress-becomes-addict-to-smoking-in-bigg-boss
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன்…! பிரபல நடிகை பகீர்
vikram-and-dhuruv-vikram-new-picture-goes-to-viral
4 நாட்களுக்கு பின் விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய துருவ்
actress-parvati-nair-latest-hot-photos
பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் கிறங்க வைத்த பார்வதி நாயர்
actor-daniel-has-been-accused-of-sexually-abusing-young-women
இளம் பெண்களிடம் அத்துமீறி பேசும் நடிகர் டேனியல்
en-rasavin-manasile-2-actor-rajkiran-new-statement
என் ராசாவின் மனசிலே-2 படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை
two-election-observers-in-tamil-nadu-of-kerala-cadre-have-been-called-back-in-view-of-tainted-background
திருப்பி அனுப்பப்பட்ட தமிழக தேர்தல் பார்வையாளர்கள்
express-train-rolled-backwards-nearly-35-kilometre-in-uttarakhand-state
35 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடிய ரயில்
customer-accused-that-zomato-delivery-person-had-hit-her
மூக்கில் குத்தி செருப்பால் அடித்து ஒரு ஸொமட்டோ டெலிவரி
/body>