நடிகர் எஸ்வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளரை தவறான வார்த்தைகளால் பதிவிட்டார். இச்செயலுக்கு செய்தியாளர்கள் மட்டுமல்லாமல், பலதரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி தான் வெளியிட்ட பதிவிற்கு மன வருத்தம் ஏற்பட்டுள்ள சகோதரிகளிடம் மன்னிப்பும் கோரினார்.
எனினும், அவர் மீது பெண் பத்திரிகையாளர் புகார் தெரிவித்தார். இதனை அடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், எஸ்வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.
இந்த பதிவை முழுமையாக படித்துப்பார்க்காமல், அப்படியே பதிவு செய்து விட்டேன். வேறு எந்த தவறையும் நான் செய்யவில்லை. இதற்கு நான் பகிரங்க மன்னிப்பும் கேட்டுயுள்ளேன் என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி எஸ்வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். அத்துடன் அவரது மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.