துவரங்குறிச்சி அருகே சாலை விபத்து - 9 பேர் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்துள்ள துவரங்குறிச்சி அருகே நேற்றிரவு திருப்பதி நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் போர்வெல் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Road accident

இதில் 4 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 1 பெண் குழந்தை என மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நாகர்கோவில் மாவட்டம் தெற்கு குளத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம் அவருக்கு வயது 79.
இவர் உறவினர்கள் மற்றும் குடும்பத்துடன் வேனில் டிவைர் உள்பட 14 பேர் நேற்று திருப்திக்குப் புறப்பட்டார்.

அவர்கள் சென்ற வேன் நேற்றிரவு 11.30 மணியளவில் மதுரையைக் கடந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி செல்லும் சர்வீஸ் ரோட்டில் வேன் சென்றபோது அந்த வேனுக்கு முன்பாகச் சென்றுகொண்டிருந்த போர்வெல் லாரி மீது மோதியது.

இதில் வேனில் இருந்த வைத்திலிங்கம் உள்பட 4 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 1 பெண் குழந்தை ஆகிய 9 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், வேனில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

1 மணிநேரத்துக்கும் மேலாக போராடி 4 பேரை படுகாயத்துடன் மீட்டனர். அவர்கள் மணப்பாறை மற்றும் திருச்சியில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.



READ MORE ABOUT :