தமிழகத்தில் புயல் ஆபத்து நீங்கி, மழைக்கு வாய்ப்பு

Dec 7, 2017, 15:31 PM IST

சென்னை, டிச.7: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாயப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பலமடைந்து நேற்று காலை காற்றழுத்த மண்டலமாக மாறியது. இது புயலாக மாறியடை அடுத்து, வட தமிழகம்&தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என்றும் சென்னை மற்றம் வட தமிழகத்தில் மிக பலத்த மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றின் சுழற்சி வேகமாக இருந்ததால் இது புயலாக மாறவில்லை. இருப்பினும், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடக்கு&வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 9ம் «தி வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் சென்னையை நோக்கி வரும் என்று வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்த நிலையில் அது திசை மாறியதால் தமிழகத்திற்கு புயல் ஆபத்து நீங்கியது. இருப்பினும், கடல் கொந்தளிப்பாக காணப்படும எனவும் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

You'r reading தமிழகத்தில் புயல் ஆபத்து நீங்கி, மழைக்கு வாய்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை