ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

May 22, 2018, 16:35 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அம்மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டம் இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ளதை அடுத்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதன்படி, தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தை நோக்கி பேரணியாக வந்தனர். ஆனால், இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

அப்போது, போலீசாருக்கும், பொது மக்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையும் மீறி பொது மக்கள் பேரணியை தொடர்ந்தனர். தொடர்ந்து, விவிடி சிக்னர் அருகே போராட்டக்குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில், போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் உண்டானது. தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு பொது மக்கள் போலீசார் மீது கல் வீசி தாக்கினர். இதனால், அப்பகுதி போர்க்களமாக காணப்பட்டது. தொடர்ந்து, பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். அப்போது, போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்கி போலீசார் தடியடி நடத்தினர்.

இதையும் மீறி போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியரை நோக்கி முற்றுகையிட முயன்றனர். அப்போது, போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
இந்த சம்பவத்தில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இதில், இதுவரை மூன்று பெண்கள் உள்பட 8 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். இதைதவிர, துப்பாக்கிச்சூட்டில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை