கமல்ஹாசன் தான் தூத்துக்குடிக்குச் செல்ல இருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் கடந்த நூறு நாள்களாக விடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தூத்துக்குடியில் போராடும் மக்களை ஒடுக்க தமிழகக் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதில் 10 பேர் பலியாகினார். பலர் காயமடைந்தனர். போராட்டத்தைக் கலவரமாக அறிவித்த அரசு தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விதித்துள்ளது. இதன் பின்னரும் மக்கள் போராட்டம் ஓயவில்லை.
தொடர்ந்து தூத்துக்குடியிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மக்களின் சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடிக்குச் செல்ல உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது தூத்துக்குடியில் உள்ள மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை கமல் சந்தித்து வருகிறார்.