தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் கடந்த நூறு நாள்களாக விடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தூத்துக்குடியில் போராடும் மக்களை ஒடுக்க தமிழகக் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதில் 11 பேர் பலியாகினார். பலர் காயமடைந்தனர். போராட்டத்தைக் கலவரமாக அறிவித்த அரசு தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விதித்துள்ளது. இதன் பின்னரும் மக்கள் போராட்டம் ஓயவில்லை.
தொடர்ந்து தூத்துக்குடியிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒற்றை ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன் ஆகும்.