தொடங்கியது தென்மேற்குப் பருவமழை- கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை

by Rahini A, May 25, 2018, 15:33 PM IST

தென்மேற்குப் பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது.

கோடைக்காலத்தின் அக்னி நட்சதிரம் முடிய தென்மேற்குப் பருவமழை தொடங்கும். இந்தாண்டில் தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ம் தேதி முதல் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

ஆனால், இன்று மே 25-ம் தேதியே தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளது. இன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடங்கிய பருவ மழை, படிப்படியாக இலங்கை மார்க்கமாக வங்காள விரிகுடாவில் இன்னும் இரண்டு நாள்களில் வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மே 28-ம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்குகிறது. இந்தாண்டு பருவமழை சாதாரணமாகவே இருக்கும் என்றும் எந்த கடுமையான சீற்றமும் இருக்காது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால், இன்று கடலோரப் பகுதி மக்களுக்கு எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, லட்சத்தீவு, கேரளா கடல் பகுதிக்கு மே 30 வரையில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தொடங்கியது தென்மேற்குப் பருவமழை- கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை