`தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது!- அமைச்சர் தங்கமணி

`தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது' என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக-வின் பொதுச் செயலளாராக இருந்த ஜெயலலிதா, மறைந்த பின்னர் அந்தக் கட்சியை பாஜக ஆட்டுவித்துக் கொண்டுள்ளது என்று திமுக உள்ளிட்ட பலர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, `மாநிலத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின்னர் தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

மின் துறையைப் பொறுத்த வரையில் கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, தமிழகம் மின்சாரத் துறையில் தன்னிறைவு பெறும் என்று தெரிவித்தது. அதைப் போலே, 2015 ஆம் ஆண்டு, மின்சாரத்தின்ல தன்னிறைவு பெற்ற மாநிலமாக, தமிழகத்தை மாற்றிக் காட்டினோம்.

இப்போதும், தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே மின் தேவை இருக்கிறது. குறிப்பாக அனல் மின் நிலையங்கள் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசிடமிருந்து பெறுவதில் எந்த சமரசமும் இதுவரை செய்யப்படவில்லை.

நமக்குத் தேவையான நிலக்கரி அளவை மத்திய அரசு ஒதுக்கி வருகிறது. மத்திய அரசுக்கு பொதுமான அழுத்தம் கொடுத்ததால், மின்சார உற்பத்தி சீராக இருக்கின்றது. பலர் கூறுவது போல, தமிழக அரசு, மத்திய அரசின் பிடியில் இல்லை' என்றார்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!