சட்டப்பேரவையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசிய போது, போராட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதகாவும், யார் நினைத்தாலும், எப்போதுமே ஆலையை திறக்க முடியாது என்று உறுதிபட கூறினார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது பொதுமக்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மட்டுமே ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டு மற்றும் நீர் தேர்வுக்கு சட்டப்பேரவையில் தீர்மானம் போட்ட அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினர்.
அதற்கு குறுக்கிட்டு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு, நீட்டிற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பதால் பேரவையில் தீர்மானம் போடப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலையின் அனுமதியை ரத்து செய்ய மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், ஆகையால் பேவையில் தீர்மானம் நிறைவேற்ற தேவையில்லை என விளக்கமளித்தார.
மீண்டும் குறுக்கிட்ட ஸ்டாலின், அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்திற்கு ஆலை நிர்வாகம் செல்ல வாய்ப்புள்ளதாக கூறினார்.
அதற்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பாகவே தற்போது தமிழக அரசின் சார்பாக நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழக அரசின் நிலைப்பாட்டை அரசு தெரிவிக்கும் என்று தெரிவித்தார்.