ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்தால், 25 ரூபாய் வரை விலை குறைக்க முடியும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் மக்கள் கோபத்தில் உள்ளனர். விலையேற்றம் செயற்கையானது என தோன்றுகிறது. ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்தால் 25 ரூபாய் வரை விலை குறையும், குறைந்தபட்சம் 5 முதல் 7 ரூபாய் வரையிலாவது விலையை குறைக்கலாமே" எனக் கருத்து தெரிவித்தார்.
"டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்தாலும், ரொக்கப் பண பரிமாற்றத்தை இந்தியாவில் மாற்ற முடியாது.மத்திய அரசின் நேரடி மானிய திட்டம் தோல்வி அடைந்துள்ளது.இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப விவசாயிகளின் வருமானத்தில் ஏற்றம் இல்லை" என்றும் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் இந்த பேச்சு, பொருளாதார நிபுணர்கள், அரசியல் கட்சியனரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.