10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்தவில் இனி மதிப்பெண் முறை: சிபிஎஸ்இ அறிவிப்பு

Dec 12, 2017, 09:23 AM IST

புதுடெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வரும் ஆண்டு முதல் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு நடைப்பெற உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இதுவரையில் கிரேட் முறையில் தான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இதில் மாற்றம் கொண்டு வந்து, இனி வரும் பொதுத்தேர்வுகளில் மதிப்பெண் முறையே பின்பற்றப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும், வரும் ஆண்டு முதல் 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

10ம் வகுப்புக்கு கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் (தொடர்பு), ஆங்கிலம்(மொழி மற்றும் இலக்கியம்) ஆகிய பாங்களுக்கும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணக்கு பதிவியல், உயிரியல், வணிக கல்வி, வேதியியல், பொருளாதாரம், ஆங்கிலம், இந்தி, கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களுக்கும் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த மதிப்பெண் முறை குறித்த முழு விவரத்தை சிபிஎஸ்இயின் இணையதளத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் என்றும், தேர்வு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

You'r reading 10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்தவில் இனி மதிப்பெண் முறை: சிபிஎஸ்இ அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை