காதலி அனுஷ்கா சர்மாவை மணந்தார் விராட் கோலி-இத்தாலியில் நடந்தது

மிலன்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் தனது காதலி அனுஷ்கா சர்மாவை நேற்று, இத்தாலியில் உள்ள ரிசார்ட்டில் மணம் முடித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக வளம் வந்தனர். இதனால், விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் காதலிப்பது உறுதியானது. இதனால், இவர்களது திருமணத்திற்கு ஏற்பாது செய்யப்பட்டது. ஆனால், திருமணம் எப்போது என்பதை இருவரும் மிக ரகசியமாக வைத்திருந்தனர். இதனால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி டெல்லியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியுடன் கோலிக்கு சுமார் 20 நாட்கள் வரை ஓய்வு பெற்றார். இந்த நேரத்தில் கோலிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவியது. இத்தாலியில் உள்ள மிலன் நகரில் வைத்து திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டின் டஸ்கனி பிராந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற போர்கோ பினோசிட்டோ ரிசார்ட்டில் விராட் கோலி அனுஷ்கா சர்மாவின் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்து இந்தியா திரும்பும் விராட்&அனுஷ்கா தம்பதி மும்பையில் விரைவில் ஆடம்பரமாக வரவேற்பு விழாவை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds