கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கோவை, நீலகிரி தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகரை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடனும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.