நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர்.
டீசல் தினசரி விலை உயர்வு, மூன்றாவது நபர் விபத்து காப்பீட்டுத் தொகை அதிகரிப்பை ரத்து செய்ய வேண்டும், நீண்ட காலமாக கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளர்கள் கடந்த மாதம் அறிவித்திருந்தனர்.
இது தொடர்பாக மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தத்தால், நாடு முழுவதும் 75 லட்சம் வாகனங்கள், தமிழகத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் சரக்கு வாகனங்கள் இயங்கவில்லை.