சம்மன் இன்றி ஓ.எஸ்.மணியன் ஆஜராவது ஏன்..? - துரைமுருகன்

சம்மன் இன்றி ஓ.எஸ்.மணியன் ஆஜராவது ஏன்..?

by Radha, Jun 21, 2018, 14:49 PM IST

காவிரி விவகாரத்தில் சம்மன் அனுப்பாமல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆஜராவது ஏன் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Durai Murugan

மயிலாடுதுறையில் நடந்த காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுக அரசை அசைக்க முடியாது என்று கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன், “காவிரி பிரச்சினையில் சாதித்தது திமுகவா? அதிமுகவா என்பது குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா" என அறிக்கை வெளியிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காவிரி பிரச்சினை குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயார் என சவால் விடுத்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக முதன்மை செயலாளர், சம்மன் அனுப்பாமல் ஓ.எஸ்.மணியன் ஆஜராவது ஏன்..? என்னுடன் மோத அமைச்சர் மணியனுக்கு தகுதியில்லை.

எப்போதும் வேண்டுமானாலும் முதலமைச்சருடன் ஒரே மேடையிலோ, சட்டசபையிலோ நேருக்கு நேர் விவாதிக்க தயார்" எனக் கூறியுள்ளார்.

More Tamilnadu News