சேலம் மாவட்டத்தில் எட்டு வழிச்சாலைக்காக விவசாயிகளின் விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் அரசின் முடிவுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
இதுகுறித்து சேலம் ஆட்சியர் ரோகிணி மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் 8 வழி சாலை குறித்து விவசாயிகள் கருத்துகளை கூற இன்னும், வாய்ப்பு இருக்கிறது. 8 வழி சாலை பணிக்காக கையகப்படுத்தும் நிலத்தில் உள்ள விவசாயிகளின் நிலம் மட்டும் அல்லாது, கொட்டகை,கிணறு, மரம், பயிர்கள் போன்றவைகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும்.
மேலும் கையகப்படுத்தும் நிலத்துக்கு குறைந்தபட்சம் 21 லட்சம் ரூபாய் முதல் அதிகப்பட்சமாக ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு 9.04 கோடி ரூபாய் வரையில் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
விவசாயிகளின் மறு வாழ்வுக்காகவும் நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளன. முதிர்ச்சி அடைந்த ஒரு தென்னை மரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்” எனத் அறிவித்துள்ளார்.