மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் - நீதிமன்றம்

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம்

by Radha, Jun 22, 2018, 21:21 PM IST

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அட்டையை கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Aadhar

புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி உள்பட 7 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆதார் கட்டாயம் என்று கூறியிருப்பதுடன், ஆதார் கட்டாயம் என்பதை இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதிக அளவில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிக புகார்கள் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட விசாரணையின்போது தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை பெற்ற மாணவர்கள் வேறு மாநிலத்திலும் மருத்துவ சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ளார்களா என்பதை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் ஆய்வு செய்வது அறிக்கை தாக்கல் செய்வது கடினம் என்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் - நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை