பசுமை வழிச்சாலை திட்டம்... நீதிமன்றத்தில் வழக்கு!

பசுமை வழிச்சாலை திட்டம்... உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

by Radha, Jun 26, 2018, 20:34 PM IST

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

green way road

பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

அதில், "2013ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தல் சட்ட திருத்தத்தின்படி, நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக அறிவிப்பாணை வெளியான 21 நாட்களுக்குள் மக்கள் கருத்து கேட்க வேண்டும் என்ற விதி இருந்த போதிலும், தற்போது மக்கள் கருத்து கேட்காமலேயே நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொள்கிறது" எனக் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், "சட்டப் பிரிவு 105ன் படி, இந்த சட்டத்தின் அம்சங்கள் எதுவும் தேசிய நெடுஞ்சாலை சட்டத்திற்கு பொருந்தாது" என கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்த சட்டப்பிரிவின் கீழ் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை சட்ட விரோதம் என அறிவித்து தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

You'r reading பசுமை வழிச்சாலை திட்டம்... நீதிமன்றத்தில் வழக்கு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை