எட்டு வழிச்சாலை விவகாரம்: சட்டவிரோதமானது என வழக்கு

by Rahini A, Jun 27, 2018, 21:05 PM IST

சென்னை-சேலம் எட்டு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த 8 வழிச்சாலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சுமார் 270 கி.மீ தொலைவில் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான நிலம் கையப்படுத்தும் பணி அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், விவசாயிகள் மத்தியிலும் சூழலியல் ஆர்வலர்கள் மத்தியிலும் இந்தத் திட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

குறிப்பாக, இத்திட்டத்தால் 2,000 ஏக்கர் விலை நிலங்கள் முற்றிலும் அழிந்துவிடும் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் இந்தத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை சட்ட விரோதமாக அறிவிக்கக் கோரி பூவுலகின் நண்பர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading எட்டு வழிச்சாலை விவகாரம்: சட்டவிரோதமானது என வழக்கு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை