பசுமை வழிச்சாலைக்காக மலைகள் குடையப்படுமா? - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

பசுமை வழிச்சாலைக்காக மலைகள் குடையப்படுமா?

by Suresh, Jun 29, 2018, 09:59 AM IST

சென்னை -சேலம் 277.3 கிலோமீட்டர் தூரத்திற்கு 8 வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது.

Tamilisai Soundararajan

இது சேலத்தில் 36.3 கிமீ, தருமபுரியில் 56 கிமீ, கிருஷ்ணகிரியில் 2 கிமீ, திருவண்ணாமலையில் 123.9 கிமீ, காஞ்சிபுரத்தில் 59.1 கிமீ தூத்திலும் இந்த சாலை 30 மீட்டர் அகலத்திற்கு அமைக்கப்படவுள்ளது.

இதற்காக மொத்தம் சுமார் 2,200 ஹெக்டே அளவிற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நிலம் கையகப்படுதுவதற்கு விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இதற்கிடையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து பேசினார்.

இதன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “பசுமை வழிச் சாலை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தியதாகவும், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இந்த திட்டம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்றும் கூறினார்.

மேலும், பசுமை வழிச்சாலை அமைப்பதால் எந்தவொரு மலையும் பாதிக்கப்படாது என்றும் எங்கேயும் மலைகள் குடையப்படாது என்றும் கூறினார்.

You'r reading பசுமை வழிச்சாலைக்காக மலைகள் குடையப்படுமா? - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை