நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில், விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ் சினிமாவில் ஜாம்பவனாக போற்றப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
மேலும், பழம்பெரும் அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும், திண்டிவனம் மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த ராமசாமி படையாச்சியின் பிறந்த நாளான செப்டம்பர் 16ம் தேதி அன்று அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.