நீதிபதிகளுக்கு மறைமுக அழுத்தம் தரப்படுகின்றது - ப.சிதம்பரம்

நீதிபதிகளுக்கு மறைமுக அழுத்தம் - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

by Radha, Jun 30, 2018, 09:13 AM IST

நீதிபதிகளுக்கு தரப்படும் மறைமுக அழுத்தமே, தீர்ப்பு வழங்க கால தாமதம் ஏற்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

P. Chidambaram

புதுக்கோட்டையில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பாமல், மத்திய அரசு நீதித்தறையை பலவீனப்படுத்தி வருகிறது.

அரசைக் கண்காணிக்க கூடிய அதிகாரம் நீதித்துறைக்கு மட்டுமே உள்ள நிலையில், நீதிபதிகளுக்கு, அரசால் அச்சுறுத்தல் விடப்படுகிறது” என விமர்சித்தார்.

“கொலிஜியம் முறையைக் கைவிட்டு, இந்திய நீதித்துறை வகுத்த விதிகளின் அடிப்படையில், நீதிபதிகளை நேரடியாக தேர்வு செய்ய வேண்டும்” என ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.

“நீதிபதிகளை பாதுகாத்து, சுதந்திரமாக செயல்பட வைக்கும் பொறுப்பு வழக்கறிஞர்களுக்கும் உண்டு. தீர்ப்பு வழங்கப்படுவதில் கால தாமதம் ஏற்பட நீதிபதிகளுக்கு தரப்படும் மறைமுக அழுத்தமே காரணம்” என ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

You'r reading நீதிபதிகளுக்கு மறைமுக அழுத்தம் தரப்படுகின்றது - ப.சிதம்பரம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை