சென்னையில், குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகப்பட்டு வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் சாலையில் குட்டி என்ற 3 வயது குழந்தை வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த வடமாநில இளைஞர்கள், கீழே விழுந்த விளையாட்டு பொருளை எடுத்து குழந்தையிடம் கொடுத்துள்ளனர்.
அதனை கண்ட குழந்தையின் பெற்றோர் வடமாநில இளைஞர்கள் குழந்தை கடத்தும் கும்பல் என்று கூறி கூச்சலிட்டுள்ளனர். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு வந்து இளைஞர்களை சரமாரி தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வட மாநிலத்தை சேர்ந்த கோபால் மற்றும் பினோத்பிகாரி ஆகிய இரு இளைஞர்கள் முகத்தில் இரத்த வடிந்த நிலையில் கீழே விழுந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இரு இளைஞர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
குழந்தை கடத்தல் கும்பல் வதந்தியால், தென்னிந்தியாவின் பல்வேறு பகுதியில் அப்பாவி மக்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.