ஸ்டெர்லைட் தொடர்பாக தமிழக அரசு தலையீடு கூடாது- வேதாந்தா வழக்கு

by Rahini A, Jul 4, 2018, 11:47 AM IST

தூத்துக்குடியில் இருக்கும் வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது வேதாந்தா.

ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி அதற்கு எதிராக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்போது போலீஸார், போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழக அரசு ஆலையை மூடுவதற்கு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லியில் இருக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், வேதாந்தா குழுமம், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் தலையீட்டை மொத்தமாக தவிர்க்கச் சொல்ல வேண்டும். ஆலையில் தற்போது யாரையும் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். அப்படியில்லாமல், ஓரிருவரையாவது ஆலைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும், மின்சார உற்பத்தியும் ஆலைக்கு முற்றிலுமாக நிறுதப்பட்டுள்ளது. அந்த நடைமுறையையும் மாற்றச் சொல்ல வேண்டும்’ என்று வழக்கிற்கான மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் மூலம் ஓராண்டுக்கு 400,000 காப்பர் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், கடந்த மார்ச் மாதம் முதல் ஸ்டெர்லைட் ஆலை மூடிய நிலையில்தான் இருக்கிறது. இது ஒருபுறமிருக்க வேதாந்தா குழுமம், ஸ்டெர்லைட் மூடியதற்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது.

You'r reading ஸ்டெர்லைட் தொடர்பாக தமிழக அரசு தலையீடு கூடாது- வேதாந்தா வழக்கு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை